காங்கிரஸ் பிரமுகருக்கு கத்திக்குத்து

உப்பள்ளியில் காங்கிரஸ் பிரமுகரை கத்தியால் குத்திய மா்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2022-10-03 19:00 GMT

உப்பள்ளி:

தார்வார் மாவட்டம் உப்பள்ளி புறநகர் சோனியா காந்தி நகரை சேர்ந்தவர் தவுசீப் லக்குந்தி (வயது 36). காங்கிரஸ் பிரமுகர். இவரது வீட்டின் முன்பு தினமும் இரவு 4 பேர் கொண்ட கும்பல் பேசி கொண்டு அரட்டை அடித்து கொண்டு வந்துள்ளனர். இது பிடிக்காமல் தவுசீப் பலமுறை அவர்களை கண்டித்து புத்திமதி கூறியுள்ளார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வழக்கம் போல் அவர்கள் தவுசீப்பின் வீட்டின் முன்பு நின்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தவுசீப் அவர்களை கடுமையாக கடித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் அந்த நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் தவுசீப்பை குத்திவிட்டு தப்பி சென்றனர்.

இதில் தவுசீப்பிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து பெண்டிகேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அதேபகுதியை ேசர்ந்த ஸ்மாயில் (வயது 24) என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்