தமிழகத்தில் நாளை முதல் 13-ந்தேதி வரை டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதன்மைத் தேர்வு

தமிழகத்தில் குரூப் 1 முதன்மைத் தேர்வு நாளை முதல் 13-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

Update: 2023-08-09 16:49 GMT

சென்னை,

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப் 1 முதன்மைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதன்படி துணை கலெக்டர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. அதன் முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. தொடர்ந்து முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் 10-ந்தேதி(நாளை) தொடங்கி 13-ந்தேதி வரை நடைபெற உள்ளன. இதில் 1,333 ஆண்கள், 780 பெண்கள் என மொத்தம் 2,113 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்