திருப்பதியில் லட்டை காட்டி விடுதிக்கு அழைத்துச் சென்ற இளம்பெண்....ரூ 6 லட்சத்தை இழந்த அப்பாவி பக்தர்...!

பஸ்சில் பழக்கமான ஐதராபாத்தை சேர்ந்த பக்தருக்கு திருப்பதி லட்டில் மயக்க மருந்து கொடுத்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணத்தை இளம்பெண் சுருட்டி சென்று விட்டார்.

Update: 2022-12-14 10:58 GMT

திருப்பதி,

ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஸ்ரீகாளகஸ்தி கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பஸ்சில் சென்றுள்ளார். அப்பொழுது பஸ்சில் பயணம் செய்த பெண் ஒருவர் அந்த நபருக்கு அறிமுகமாகியுள்ளார். பின்னர் ஸ்ரீகாளகஸ்தியில் உள்ள ஒரு லாஜிக்கு அழைத்துச் சென்ற அந்த பெண் ஏழுமலையான் கோவில் பிரசாதத்தை வழங்கி உள்ளார்.

பிரசாதம் சாப்பிட்ட சில நிமிடங்களில் அந்த நபருக்கு போதை மயக்கம் ஏற்பட்டுள்ளது. போதை மயக்கத்தில் இருந்த அந்த நபரிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணம் திருடிக் கொண்டு அந்தப் பெண் காணாமல் சென்றார். போதை மயக்கம் தெளிந்த பிறகு அந்த நபர் தன்னிடம் இருந்த நகை மற்றும் பணம் திருடு போனது அறிந்து ஸ்ரீகாளஹஸ்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஸ்ரீ காளஹஸ்தி போலீசார் வழக்கு பதிவு செய்து லாட்ஜில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் ஆதாரமாக வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருவதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்