திருப்பதி: பக்தர்களின் தலை முடிகாணிக்கை ரூ.48 கோடிக்கு ஏலம்- தேவஸ்தானம் தகவல்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக அளிக்கும் தலைமுடி, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஏலம் விடப்படும்.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 21ஆயிரம் கிலோ தலை முடி, 48 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக அளிக்கும் தலைமுடி, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஏலம் விடப்படும்.
அந்த வகையில் நடைபெற்ற ஏலத்தில், 21 ஆயிரத்து 100 கிலோ தலைமுடி, 48 கோடி ரூபாய்க்கு ஏலம் போனதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.