பராமரிப்பு பணிகள் எதிரொலி: திருநெல்வேலி-தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 4 நாட்கள் ரத்து

பராமாிப்பு பணிகள் காரணமாக திருநெல்வேலி-தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 4 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது என கொங்கன் ரெயில்வே தெரிவித்துள்ளது.

Update: 2023-02-05 18:45 GMT

மங்களூரு:

திருநெல்வேலி-தாதர்

கொங்கன் ரெயில்வே ெவளியிட்டுள்ள ெசய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தட்சிண கன்னடா மாவட்டம் ஜோக்கட்டே-படீல் ரெயில் நிலையங்கள் இடையே சுரங்கப்பாதை தற்றும் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுபற்றி விவரம் பின்வருமாறு:-

* தாதர்-திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 22629) வருகிற 9-ந்தேதி, 16-ந்தேதி, 23-ந்தேதி மற்றும் மார்ச் 2-ந்தேதி ஆகிய 4 நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

* திருநெல்வேலி-தாதார் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (22630) வருகிற 8, 15, 22 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

* ஜாம்நகர்-திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (19578) வருகிற 10, 11, 17, 18, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

ஹம்சாபர் எக்ஸ்பிரஸ் ரெயில்

* திருநெல்வேலி-ஜாம்நகர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (19577) வருகிற 13, 14, 20, 21, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட உள்ளது.

* காந்திதாம்-திருநெல்வேலி ஹம்சாபர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (20924) வருகிற 13, 20, 27 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

* திருநெல்வேலி-காந்திதாம் ஹம்சாபர் வாராந்திர எக்ஸ்விரஸ் ரெயில் (20923) வருகிற 16, 23 மற்றும் மார்ச் மாதம் 2 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

இவை உள்பட மொத்தம் 18 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்