உத்தரபிரதேசம்: வீட்டின் மேற்கூரை இடிந்து 3 பெண்கள் உயிரிழப்பு
உத்தரபிரதேசத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்தனர்.;
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்தனர். விரம்பூர் கிராமத்தில் உள்ள இரண்டு மாடி வீடு ஒன்றின் மேற்கூரை நேற்று காலை பெய்த கனமழையில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த 3 பெண்கள் இடிபாடுகளில் சிக்கினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் பொக்லைன் எந்திரம் மூலம் இடிபாடுகளை அகற்றி அதன் அடியில் சிக்கிய 3 பெண்களையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் மூவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் நீலம், அனுபமா மற்றும் பிரீத்தி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூவரும் 30 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.