வனத்துறை அதிகாரியிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டல் இளம்பெண் உள்பட 3 பேர் கைது

தீர்த்தஹள்ளி அருகே வனத்துறை அதிகாரியிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டிய ஹனிடிராப் கும்பலை சேர்ந்த இளம்பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-27 18:45 GMT

சிவமொக்கா-

தீர்த்தஹள்ளி அருகே வனத்துறை அதிகாரியிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டிய ஹனிடிராப் கும்பலை சேர்ந்த இளம்பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வனத்துறை அதிகாரி புகார்

சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா ஆகும்பே வட்டார துணை வனத்துறை அதிகாரி ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தீர்த்தஹள்ளி போலீசில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் இளம்பெண் மற்றும் வாலிபர்கள் 6 பேர் சேர்ந்து தன்னிடம் ஹினிடிராப் முறையில் பணம் பறிக்க முயற்சித்ததாக குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் மனுவை வாங்கிய தீர்த்தஹள்ளி போலீசார் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் பெஜ்ஜவள்ளியை சேர்ந்த இளம்பெண், மற்றும் கண்டேஹக்கலு, உளகாரு, கானுகோடு, கோரகோடு பகுதியை சேர்ந்த 6 வாலிபர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு என்னை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது கல்லூரி மாணவி ஒருவரின் புகைப்படத்தை எனக்கு அனுப்பி வைத்திருந்தனர். பின்னர் அந்த புகைப்படத்தில் இருந்த மாணவியை நான் இருக்கும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

புகைப்படம் எடுத்து மிரட்டல்

அப்போது அந்த மாணவி என்னிடம் நெருக்கம் காட்டினார். இதை அங்கு மறைந்திருந்த வாலிபர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். பின்னர் அவர்கள் அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டினர். அதாவது புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிடக்கூடாது என்றால் ரூ.15 லட்சம் வழங்க வேண்டும். இல்லையென்றால் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி வருகின்றனர்.

எனக்கு அந்த கல்லூரி மாணவி யார் என்றே தெரியாது. வாலிபர்கள் வேண்டுமென்றே என்னை சிக்க வைத்து பணம் பறிக்க முயற்சிப்பதாக வனத்துறை அதிகாரி போலீஸ் விசாரணையில் கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து இளம்பெண் மற்றும் அவருடன் சேர்ந்த வாலிபர்களை தேடி வந்தனர்.

3 பேர் கைது

இந்தநிலையில் நேற்று முன்தினம் போலீசார் இளம்பெண் உள்பட 3 பேைர கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்