எதிர்க்கட்சிகளின் வாரிசு அரசியல் நாட்டுக்கு உகந்தது அல்ல - பிரதமர் மோடி பேச்சு

காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் காந்தி குடும்பம் மட்டுமே பலனடையும் என போபாலில் பிரதமர் மோடி பேசினார்.

Update: 2023-06-27 08:34 GMT

போபால்,

மத்திய பிரதேசம் சென்ற பிரதமர் மோடி 5 புதிய வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைத்தார். பிறகு. பா.ஜ.,வின் பூத் கமிட்டியினருடன் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக மோடி பேசினார்.

"இன்று 2 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களைப் பெற்றதற்காக மத்தியப் பிரதேச மக்களை நான் வாழ்த்துகிறேன். போபாலில் இருந்து ஜபல்பூர் வரையிலான பயணம் இப்போது வேகமாகவும் வசதியாகவும் இருக்கும். வந்தே பாரத் ரெயில் மாநிலத்தில் இணைப்பை அதிகரிக்கும்.

பாஜகவின் ஒவ்வொரு தொண்டருக்கும், நாட்டின் நலன் தான் முக்கியம். கட்சியை விட நாடு பெரியது. இதுபோன்ற கடின உழைப்பாளிகளுடன் நான் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

2047ஆம் ஆண்டு வரை இந்தியா 100 ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும் வரை இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற விரும்புகிறோம், நமது கிராமங்கள் வளர்ச்சியடையும் போதுதான் நம் நாடு வளர்ந்த நாடாக மாறும்.

நாட்டு நலனுக்காகவும், சந்ததிகள் முன்னேற்றத்திற்காவும் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

எதிர்க்கட்சிகளின் வாரிசு அரசியல் நாட்டுக்கு உகந்தது அல்ல. காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் காந்தி குடும்பம் மட்டுமே பலனடையும். திமுகவுக்கு வாக்களித்தால் கருணாநிதியின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மட்டுமே பயனடைவார்கள்.

ஊழல்கள் பிடிபட்டதால் எதிர்க்கட்சிகள் இன்றிணைந்துள்ளன ஊழல்கள் பிடிபட்டதால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்க்கின்றன. ஊழல் செய்தவர்களை விட மாட்டோம், அவர்கள் சிறை செல்ல நேரிடும்.

அரசியல் சானமும் அனைவரும் சமம் என்று கூறும்போது எப்படி 2 வகையான சட்டங்கள் இருக்க முடியும்? பொது சிவில் சட்டத்தில் எதிர்க்கட்சிகள் வாக்கு வங்கி அரசியல் செய்கிறது. பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டும் கூறியுள்ளது. முத்தலாக்கை ஆதரிப்பவர்கள் முஸ்லிம் பெண் குழந்தைகளுக்கு கடும் அநீதி இழைக்கிறார்கள். 2024 தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறும் என்பதால் எதிர்க்கட்சிகள் கடும் கோபத்தில் உள்ளன. அதனால் அவர்கள் கூட்டங்கள் நடத்தி ஒன்று கூடுகிறார்கள். அடுத்த மக்களவை தேர்தலில் பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்து விட்டனர்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்