மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தது குறித்து டெல்லியில் விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்

கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை எதிர்க்கட்சிகள் சார்பில் சந்தித்தது குறித்து டெல்லியில் விசிக தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.

Update: 2023-07-30 10:49 GMT

புதுடெல்லி,

மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை எதிர்க்கட்சிகள் சார்பில் சந்தித்தது குறித்து டெல்லியில் விசிக தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது;

சுரசந்த்பூர் மாவட்டத்தில் முகாம்களில் உள்ள மக்களை சந்தித்து பேசினோம். முகாம்களில் தங்கி உள்ளவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தோம். தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என மணிப்பூர் மக்கள் தெரிவித்தனர். தங்கள் வேதனைகளை கூறினர்.

முகாம்களில் குடிநீர், உணவு உள்ளிட்ட வசதிகளை மணிப்பூர் பாஜக அரசு செய்து தரவில்லை என்று புகார் தெரிவித்தனர். இரு தரப்பு மக்களும் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார்கள்.

மணிப்பூர் விவகாரத்தில் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு பொறுப்பற்ற முறையில் செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

Tags:    

மேலும் செய்திகள்