மராட்டியத்தில் ஏக்னாத் ஷிண்டேவின் ஆட்சி நிலைக்காது - மம்தா பானர்ஜி கருத்து

மராட்டியத்தில் ஏக்னாத் ஷிண்டேவின் ஆட்சி நிலைக்காது என்று மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-04 13:02 GMT

ஐதராபாத்,

மராட்டியத்தில் கடந்த 2½ ஆண்டுகளாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தது. இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் இந்த ஆட்சி கவிழ்ந்தது.

கடந்த புதன் கிழமை உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த நாளே அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியானார்.

இந்தசூழலில் இன்று (திங்கட்கிழமை) மராட்டிய சட்டசபையில் ஏக்நாத் ஷிண்டே அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் மராட்டிய சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே 164-99 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த நிலையில், மராட்டியத்தில் ஏக்னாத் ஷிண்டேவின் ஆட்சி குறித்து கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேசியதாவது:-

"இந்த அரசாங்கம் தொடராது என்று நான் நம்புகிறேன். இது ஒரு நெறிமுறையற்ற ஜனநாயகமற்ற அரசாங்கம். அவர்கள் அரசாங்கத்தை வென்றிருக்கலாம், ஆனால் மராட்டிய மக்களின் இதயத்தை வெல்லவில்லை.


பாஜக- முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான இந்த ஆட்சி நிலைக்காது. அரசு விரைவில் கவிழும்.

மராட்டிய சிவசேனா கிளர்ச்சி எம்எல்ஏக்களுக்கு "அசாமில் பாஜக பணம் மற்றும் பிற பொருட்களை" வழங்கியது. "என்று மம்தா பானர்ஜி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்