'வாக்காளர்களுக்கு இஸ்திரி பெட்டி கொடுத்ததாக நான் எங்கும் கூறவில்லை'

ஓட்டுக்காக பரிசு பொருட்கள் வழங்கியதாக ஏற்பட்ட சர்ச்சையில் வாக்காளர்களுக்கு இஸ்திரி பெட்டி கொடுத்ததாக தான் எங்கும் கூறவில்லை என்று முதல்-மந்திரி சித்தராமையாவின் மகன் யதீந்திரா சித்தராமையா கூறியுள்ளார்.;

Update: 2023-09-23 18:45 GMT

மைசூரு

யதீந்திரா

கர்நாடக சட்டசபை தேர்தலில் மைசூரு மாவட்டத்தில் உள்ள வருணா தொகுதியில் சித்தராமையா போட்டியிட்டு வெற்றிபெற்றார். தற்போது அவர் முதல்-மந்திரியாக உள்ளார்.

இந்த தொகுதியில் முன்பு சித்தராமையாவின் மகன் யதீந்திரா எம்.எல்.ஏ.வாக இருந்தார். தனது தந்தைக்காக அவர் வருணா தொகுதியை விட்டுக்கொடுத்தார்.

இந்த நிலையில் வருணா தொகுதிக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் யதீந்திரா பேசும்போது, தேர்தல் சமயத்தில் மக்களுக்கு தனது தந்தை இஸ்திரி பெட்டி கொடுத்ததாக கூறியிருந்தார். அது பெரும்சர்ச்சையை ஏற்படுத்தியது.

வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள்

வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் கொடுப்பது தவறு என்றும், ஆனால் சித்தராமையாவே பரிசு பொருள் கொடுத்து தான் தேர்தலில் வெற்றிபெற்றதாக அவரது மகன் யதீந்திரா ஒப்புக் கொண்டதாகவும் எதிர்க்கட்சியினர் விமர்சித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து யதீந்திரா நேற்று மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சலவை தொழிலாளர்களுக்கு எனது தந்தை சித்தராமையா இஸ்திரி பெட்டி கொடுத்ததை திரித்து பரப்பி வருகிறார்கள். வாக்காளர்களுக்கு பரிசுப்பொருள் கொடுத்து தேர்தலில் வெற்றிபெறவில்லை. நான் கூறியதை தவறாக திரித்து வெளியிட்டுள்ளனர். இதை யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.

எங்கேயும் சொல்லவில்லை

வாக்காளர்களுக்கு எனது தந்தை சித்தராமையா குக்கர், இஸ்திரி பெட்டி கொடுத்ததாக நான்(யதீந்திரா) எங்கேயும் சொல்லவில்லை. தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பு, அதாவது கடந்த ஜனவரி மா, அச்சங்கத்தின் சார்பாக பயனாளிகளுக்கு குக்கர், இஸ்திரி பெட்டி வழங்கினார்.

அந்த பொருட்கள் அனைத்தும் அச்சங்கத்தின் சார்பாக பயனாளிகளுக்கு கொடுக்கப்பட்டதே தவிர, அவற்றுக்காக நானோ(யதீந்திரா), எனது தந்தையோ(சித்தராமையா) மற்றும் எங்களது குடுபத்தினரோ, காங்கிரஸ் கட்சியினரோ ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை.

சம்பந்தம் இல்லை

மேலும் அந்த நிகழ்ச்சிக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. நான் அந்த நிகழ்ச்சியில் நடந்த சில விஷயங்களை மேற்கோள் காட்டி பேசினேன். அதை தவிர அதில் வேறு எந்த குளறுபடியும் நடக்கவில்லை. வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள் கொடுத்துதான் நாங்கள் தேர்தலில் ஓட்டு வாங்கினோம் என்று நான் எங்கும் கூறவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்