கழிவுநீரை 3 முறை சுத்திகரித்து அனுப்பாவிட்டால் ெபரிய அளவில் போராட்டம்

பெங்களூருவில் இருந்து கழிவுநீரை 3 முறை சுத்திகரித்து அனுப்பாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று கோலார் போராட்ட குழு அறிவித்துள்ளது.

Update: 2023-10-01 18:45 GMT

கோலாா்

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவை ஒட்டி அமைந்துள்ளது கோலார் மாவட்டம். தென்கர்நாடக மாநிலங்களில் கோலார் வறட்சி மாவட்மாக உள்ளது. இங்கு சுமார் 1,700 அடி தோண்டினாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் கோலார் மாவட்ட மக்கள் தண்ணீருக்காக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

பணம் ெகாடுத்து தண்ணீரை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். வறட்சி மாவட்டமான கோலாரில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க கோலார் மாவட்ட போராட்ட குழு அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் தொடர்ந்து போராட்டமும் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கோலார் மாவட்டத்துக்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசு கே.சி.வேலி திட்டத்தை அறிமுகம் ெசய்தது. அதாவது பெங்களூருவில் நகரில் சேகரிக்கப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து கோலார் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு நிரப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கே.சி.வேலி திட்டத்தில் கோலாருக்கு அனுப்பப்படும் தண்ணீரில் துர்நாற்றம் வீசுவதாகவும், அது சுத்தமானது இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தகவல் ெவளியானது.

இந்த நிலையில், கோலார் மாவட்ட போராட்ட குழுவினர், பெங்களூருவில் இருந்து கழிவுநீரை 3 முறை சுத்திகரிப்பு செய்து கோலாருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்