அக்னிபத் திட்டத்தில் இளைஞர்களுக்கு உறுதியான எதிர்காலம் இல்லை - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நாட்டின் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களின் குரல்களை பிரதமர் மோடி கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-16 11:43 GMT

சென்னை,

மத்திய அரசு புதிய அக்னிபத் என்ற திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இந்த திட்டத்தின்படி ராணுவத்தில் சேரும் வீரர்களுக்கு 4 ஆண்டு காலத்திற்கு மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்படுவர். இதில் வீரர்களுக்கு மாதாந்திர ஊதியம் வழங்கப்படும்.

4 ஆண்டுகால பணிக்காலம் முடிவடைந்ததும் சேவா நிதி என்ற ஒரே தடவையிலான தொகுப்பு வழங்கப்படும். ஆனால் இவர்களுக்கு பணிக்கொடை மற்றும் ஓய்வூதிய பயன்கள் அளிக்கபட மாட்டாது என தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் இளைஞர்கள் நேற்றுமுதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அக்னிபத் திட்டம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

"அக்னிபத் திட்டத்தில் பதவி இல்லை, ஓய்வூதியம் இல்லை..!

2 ஆண்டுகளாக நேரடி ஆட்சேர்ப்பு இல்லை..!

அக்னிபத் திட்டத்தில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞர்களுக்கு உறுதியான எதிர்காலம் இல்லை..!

இராணுவத்திற்கு மரியாதை இல்லை..!

நாட்டின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் குரல்களை பிரதமர் மோடி கேட்க வேண்டும். 'அக்னிபத் திட்டத்தில் இளைஞர்களை அடக்கி 'நெருப்புப் பரீட்சை' செய்யாதீர் பிரதமரே." என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்