பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை - மம்தா பானர்ஜி

நாட்டின் பொருளாதாரத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு சீரழித்துவிட்டதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-31 08:11 GMT

கொல்கத்தா,

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சியமைத்து நேற்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், மேற்குவங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான அம்மாநிலத்தின் புருலியா மாவட்டத்தில் இன்று நடந்த கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய மம்தா பானர்ஜி, பாஜக தலைமையிலான மத்திய அரசு கலப்படம் நிறைந்தது. அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய பணமதிப்பிழப்பு போன்ற முடிவுகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை பாஜக அரசு சீரழித்துவிட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிகப்பெரிய ஊழல்.

மக்களுக்கு எதிரான மத்திய பாஜக அரசால் நாட்டு மக்கள் சலிப்படைந்து விட்டனர். 2024 மக்களவை தேர்தலில் பாஜக நுழைய முடியாது என்பதை நான் தெளிவாக கூறிக்கொள்கிறேன். பாஜக வெளியேற்றப்பட வேண்டும். மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை' என்றார்.     

Tags:    

மேலும் செய்திகள்