பல நாடுகளுடனான நமது வலிமையான உறவை உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது: பிரதமர் மோடி

வர்த்தகம், சுற்றுலா மற்றும் தொழில் நுட்பத்தில் நம்முடைய உறவுகள் சிறந்தவையாக உள்ளன என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Update: 2024-02-18 19:29 GMT

புதுடெல்லி,

டெல்லி பாரத் மண்டபத்தில் நடந்த பா.ஜ.க. தேசிய மாநாட்டின் நிறைவு நாளில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசும்போது, 2014-ம் ஆண்டு நான் பதவி பிரமாணம் எடுத்து கொண்டபோது, ஒரு மாநிலத்திற்கு வெளியே மோடிக்கு என்ன அனுபவம் இருக்க போகிறது என பலர் விமர்சித்தனர்.

வெளியுறவு கொள்கை பற்றி பல விசயங்கள் கூறப்பட்டன என அவர் கூறினார். கடந்த ஆண்டில், பிரதமர் மோடியின் தூதரக அளவிலான வெற்றிகள் பரவலாக பார்க்கப்படுகிறது.

சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பது, நட்புறவுகளை வலுப்படுத்தியது மற்றும் உலகளாவிய அமைதி மற்றும் வளர்ச்சியில் இந்தியாவின் உள்ளார்ந்த ஈடுபாட்டை வெளிப்படுத்தியது என பல்வேறு விசயங்களை அவர் மேற்கொண்டார்.

இதுமட்டுமல்லாமல், நடப்பு 2024-ம் ஆண்டு தொடக்கத்தில், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் நாடுகளுக்கு அவர் வரலாற்று பயணம் மேற்கொண்டார்.

இதுபற்றி குறிப்பிட்ட அவர், பல நாடுகளுடனான நமது உறவு எப்படி வலிமையாக உள்ளது என்று இந்த உலகம் ஆனது பார்த்து கொண்டிருக்கிறது. வர்த்தகம், சுற்றுலா மற்றும் தொழில் நுட்பத்தில் நம்முடைய உறவுகள் சிறந்தவையாக உள்ளன என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

5 அரபு நாடுகள் எனக்கு, அவர்களுடைய நாட்டின் உயரிய கவுரவங்களை வழங்கினர். இது பிரதமர் மோடிக்கான கவுரவம் என்றல்லாமல், 140 கோடி நாட்டு மக்களின் கவுரவம் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்