'அயன்' பட பாணியில் தங்க பசை கடத்திய பெண்...புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடி

பேங்காங்கில் இருந்து வந்த பெண்ணை பரிசோதித்ததில், உடலில் 270 கிராம் தங்க பசை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

Update: 2022-12-23 19:20 GMT

புனே,

பேங்காங்கில் இருந்து புனேவுக்கு 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க பசையை உடலில் மறைத்து எடுத்து வந்த பெண்ணை, புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

புனே விமான நிலையத்திற்கு பேங்காங்கில் இருந்து வந்த பெண்ணை பரிசோதித்ததில், உடலில் 270 கிராம் தங்க பசை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து11 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த புலனாய்வு பிரிவு போலீசார், அந்த பெண்ணை கைது செய்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்