கணவரை வீட்டில் இருந்து பேச வரும்படி வெளியே அழைத்து அந்த நேரத்தில் மனைவி பலாத்காரம்

மத்திய பிரதேசத்தில் சிறையில் உள்ள கணவரை வெளியே கொண்டு வர உதவுகிறேன் என கூறி மனைவியை கணவரின் நண்பர் பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.

Update: 2022-12-12 04:42 GMT

இந்தூர்,

மத்திய பிரதேசத்தின் சந்தன் நகர் பகுதியில் பெண் ஒருவரின் கணவர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். கணவரின் நண்பரான சகீர் என்பவர், அவரது மனைவியை தொடர்பு கொண்டுள்ளார்.

அவர், சிறையில் உள்ள உனது கணவரை விடுதலை செய்து வெளியே கொண்டு வருவதற்கு உதவுகிறேன் என மனைவியிடம் கூறியுள்ளார். தேவையான அளவுக்கு நிதியுதவியும் தருகிறேன் என கூறி நட்பு பாராட்டி உள்ளார்.

இதனை அந்த பெண்ணும் நம்பியுள்ளார். இதன்பின்னர், அந்த பெண்ணிடம் உடல்சார்ந்த தொடர்புகளை ஏற்படுத்தி உள்ளார். அதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

சமீபத்தில் பெண்ணின் கணவர் சிறையில் இருந்து விடுதலையானார். இந்த நிலையில், சகீர் தனது கூட்டாளிகள் இரண்டு பேருடன் பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளார். அவர்கள் முன்பே திட்டமிட்டபடி, சகீரின் கூட்டாளிகளில் ஒருவர் பெண்ணின் கணவரை அழைத்துள்ளார்.

வீட்டில் இருந்து வெளியே வந்த அவரிடம் சில விவகாரங்களை பற்றி பேச வேண்டும் என கூறி சற்று தொலைவுக்கு அழைத்து சென்றுள்ளார். இந்த சூழலில், மற்றொரு கூட்டாளி வீட்டின் வெளியே காவலுக்கு நிற்க, வீட்டுக்குள் புகுந்த சகீர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

கணவர் வீடு திரும்பியதும், நடந்த சம்பவங்களை அவரிடம் அந்த பெண் கூறி அழுதுள்ளார். இதுபற்றி சந்தன் நகர் காவல் நிலையத்தில் இருவரும் புகார் அளித்துள்ளனர். சகீரின் கூட்டாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தப்பியோடிய முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்