பெங்களூரு மாநகராட்சியின் வார்டு வரையறை அறிக்கை அரசிடம் இன்று தாக்கல்; தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தகவல்

பெங்களூரு மாநகராட்சியின் வார்டு வரையறை அறிக்கை அரசிடம் இன்று தாக்கல் செய்யப்படுவதாக தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தகவல் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-06-08 21:32 GMT

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சியின் தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் நிருபர்களிடம் கூறியதாவது:-பெங்களூரு மாநகராட்சியின் வார்டுகள் 198-யில் இருந்து 243 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. பெங்களூரு மாநகராட்சி தேர்தலை நடத்துவதற்கு சுப்ரீம் கோர்ட்டு 8 வாரங்கள் காலஅவகாசம் வழங்கி உள்ளது. அதன்படி, வார்டு வரையறை செய்ய மாநகராட்சி சார்பில் தனியாக குழு அமைக்கப்பட்டு இருந்தது. அந்த குழுவினர் வார்டு வரையறை சம்பந்தப்பட்ட அறிக்கையை நாளை (அதாவது இன்று) கர்நாடக அரசின் நகர வளர்ச்சித்துறையிடம் தாக்கல் செய்ய உள்ளனர். இந்த அறிக்கை 2 மொழிகளில் இருக்கும். ஒரு வார்டுவுக்கு 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு வார்டு வரையறை பட்டியலில் சில மாற்றங்களும், தவறுகளும் இருந்தது. அதனால் வார்டு வரையறை பட்டியலை அரசிடம் தாக்கல் செய்து விட்டு மாநகராட்சி திரும்ப பெற்றிருந்தது. தற்போது அந்த தவறுகள் அனைத்தும் திருத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி தேர்தலை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால், அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒவ்வொன்றாக செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு துஷார் கிரிநாத் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்