12 வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர் சிக்கினார்

கூட்டுறவு வங்கி கொள்ளை உள்பட 12 வழக்கில் தேடப்பட்டு வந்தவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-01-08 18:45 GMT

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா டவுன் பகுதியில் கடந்த சில மாதங்களில் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளன. அதன்பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மகும்பலை தேடி வந்தனர். இந்த நிலையில் டவுன் அருகே வீட்டுவசதி குடியிருப்பு பகுதியில் சுற்றிய வாலிபர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் டவுன் பகுதியை சேர்ந்த அகமது கபீர் (வயது 30) என்பது தெரிந்தது.

மேலும், அவர் பூட்டிய வீடுகளை குறிவைத்து திருட்டில் ஈடுபட்டு வந்ததும், கொப்பா டவுன் கூட்டுறவு வங்கி பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதுமட்டுமல்லாது அவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் 12-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரிந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில் 292 கிராம் தங்க நகைகள், 300 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை போலீசார் மீட்டனர். அவற்றின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என போலீசார் கூறினர். இவரை கைது செய்ததன் மூலம் சிக்கமகளூரு டவுன் பகுதியில் நிலுவையில் இருந்த 10-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags:    

மேலும் செய்திகள்