மனைவியின் கழுத்தை அறுத்துவிட்டு கணவன் எடுத்த விபரீத முடிவு.! கேரளாவில் அதிர்ச்சி
கேரளாவில், மனைவியின் கழுத்தை அறுத்து விட்டு கணவன் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
கோழிக்கோடு,
கேரள மாநிலம் கல்லூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி பாபு மற்றும் கிரேசி. கணவன் மனைவி இருவரும் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்றைய தினமும் இருவரும் சண்டையிட்டதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவியின் கழுத்தை பாபு அறுத்துள்ளார்.
இதனால் படுகாயமடைந்த அவரது மனைவி அலறியடித்தபடி வெளியே ஓடிச் சென்றார். பின்னர், பாபு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிரேசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.