மாணவிகளுக்கு ஆபாச வீடியோ காட்டிய ஆசிரியருக்கு அடித்து-செருப்பு மாலை அணிவித்த பெற்றோர்கள்

மாணவிகளுக்கு வகுப்பறையில் ஆபாச வீடியோ காட்டிய ஆசிரியரை அடித்து உதைத்து செருப்பு மாலை அணிவித்த பெற்றோர்கள்.

Update: 2022-09-30 09:39 GMT

solapurvarta.in

ராஞ்சி

ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள மேற்கு சிங்புமை அடுத்த பதஜம்டாவில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றுபவர் துகாராம். இவர் வகுப்பறையில் மாணவிகளிடம் ஆபாச படங்கள், வீடியோக்களை காண்பித்து பாலியல்ரீதியாக அவர்களிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது.

இது குறித்து 6 மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். உடனே பெற்றோர்கள் இது பற்றி போலீசில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

உடனே கிராம மக்கள் அந்த ஆசிரியரின் முகத்தில் மை தெளித்து செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடமிருந்து ஆசிரியரை மீட்டனர்.

அந்த ஆசிரியரைக் கைதுசெய்து சிறைக்கு அனுப்பவேண்டும் என்று கோரி கிராம மக்கள் போலீஸ் நிலையம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆசிரியர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரித்து வருவதாக போலீஸ் அதிகாரி பாசுதேவ் தெரிவித்திருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்