அனுமதியின்றி ஊர்வலம் சென்றதாக சித்தராமையா, டி.கே.சிவக்குமார் மீது வழக்கு

அனுமதியின்றி ஊர்வலம் சென்றதாக சித்தராமையா, டி.கே.சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2022-09-24 21:49 GMT

பெங்களூரு: பெங்களூரு ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர் காங்கிரஸ் தலைவர்கள் ஊர்வலமாக சென்று ரேஸ்கோர்ஸ் சுற்றுச்சுவரில் 'பே-சி.எம்.' போஸ்டர்களை ஒட்டினர்.

இதனால் அவர்களை போலீசார் கைது செய்து இருந்தனர். இந்த நிலையில் அனுமதியின்றி ஊர்வலம் சென்று போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மீது பெங்களூரு ஐகிரவுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்