ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் பாரம்பரிய சாரட் வண்டி இடம்பெறவில்லை

ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவியேற்பு விழாவில் பாரம்பரிய சாரட் வண்டி இடம்பெறவில்லை.;

Update: 2022-07-25 23:43 GMT

புதுடெல்லி,

இந்திய ஜனாதிபதியின் பதவியேற்பு உள்ளிட்ட அவர் பங்கேற்கும் பாரம்பரிய நிகழ்வுகளில் சாரட் வண்டி இடம்பெறுவது மரபு. 6 குதிரைகள் பூட்டப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட இந்த சாரட் வண்டியில் டெல்லி ராஜபாதையில் ஜனாதிபதி செல்லும் ஊர்வலம் காண்போரை பரவசம் அடையச்செய்யும்.

ஆனால் இது ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக கூறி பின்னாளில் இது வழக்கொழிந்தது.

ஆனால் சுமார் 30 ஆண்டுகளுக்குப்பின் கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மீண்டும் இந்த சாரட்டுக்கு உயிர் கொடுத்தார். அந்த ஆண்டில் படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சிக்கு வந்த அவர், இந்த குதிரை வண்டியில் வந்தார்.

அதைத்தொடர்ந்து பதவியேற்ற முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் இந்த வண்டியை பல்வேறு நிகழ்வுகளில் பயன்படுத்தினார். ஆனால் 15-வது ஜனாதிபதியாக நேற்று திரவுபதி முர்மு பதவியேற்பு விழாவில் இந்த சாரட் வண்டி இடம்பெறவில்லை. ஜனாதிபதி மாளிகையில் இருந்து லிமோசின் காரில் பதவியேற்பு விழாவுக்கு வந்த முர்மு, மீண்டும் லிமோசின் காரிலேயே திரும்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்