டெல்லியில் இருந்து புறப்பட்டபோது போலியான எச்சரிக்கையால் மீண்டும் திரும்பி வந்த விமானம்..!
டெல்லியில் இருந்து புறப்பட்டபோது போலியான எச்சரிக்கையால் விமானம் மீண்டும் திரும்பி வந்தது.;
புதுடெல்லி,
டெல்லியில் இருந்து காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்கு ஒரு தனியார் விமானம் புறப்பட்டது. அதில் 140 பயணிகள் இருந்தனர். நடுவானில் சென்றபோது, விமானத்தில் பயணிகளின் உடைமைகள் வைக்கும் சரக்கு பகுதியில் தீப்பிடித்துக் கொண்டதாக விமானி அறையில் எச்சரிக்கை விளக்கு எரிந்தது.
அதிர்ச்சி அடைந்த விமானி, அந்த விளக்கை அணைத்தார். சரக்கு பகுதியை திறந்து பார்த்தபோது, தீ பிடித்த அறிகுறியோ, புகையோ தென்படவில்லை. இதனால், அது போலியான எச்சரிக்கை என்று தெரிய வந்தது.
இருப்பினும், விமானத்தை மீண்டும் டெல்லி விமான நிலையத்துக்கே விமானி திருப்பினார். அங்கு விமானம் பத்திரமாக தரை இறங்கியது. பயணிகள் கீழே இறக்கப்பட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.