முடக்கப்பட்டதை கட்சி சின்னம்... உத்தவ் தாக்கரே டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல்

இடைத்தேர்தலில் 2 அணிகளும் பயன்படுத்த முடியாத வகையில் சிவசேனாவின் பெயர், வில், அம்பு சின்னத்தை தேர்தல் ஆணையம் அதிரடியாக முடக்கியது.;

Update: 2022-10-10 22:55 GMT

கோப்புப்படம் 

மும்பை,

ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரேக்கு எதிராக திரும்பியதை அடுத்து கடந்த ஜூன் மாதம் சிவசேனா 2 ஆக உடைந்தது. தற்போது அந்த கட்சி 2 அணியாக செயல்பட்டு வருகிறது. இருதரப்பும் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என உரிமை கோரி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடந்து வருகிறது.

இந்தநிலையில் அடுத்த மாதம் 3-ந் தேதி நடைபெற உள்ள அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 2 அணிகளும் பயன்படுத்த முடியாத வகையில் சிவசேனாவின் பெயர், வில், அம்பு சின்னத்தை தேர்தல் ஆணையம் அதிரடியாக முடக்கியது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு உத்தவ் தாக்கரே அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்தநிலையில் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் உத்தவ் தாக்கரே தரப்பு மனு தாக்கல் செய்து உள்ளது. இது தொடர்பாக உத்தவ் தாக்கரே தரப்பு தாக்கல் செய்த மனுவில், 2 தரப்பின் வாதங்களை கூட கேட்காமல் தேர்தல் ஆணையம் கட்சியின் சின்னத்தை முடக்கி உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளது. மேலும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.

இந்தநிலையில் தங்கள் தரப்பை கேட்காமல் உத்தவ் தாக்கரே மனு மீது எந்த முடிவும் எடுக்க கூடாது என ஏக்நாத் ஷிண்டே தரப்பும் டெல்லி ஐகோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்து உள்ளனர். இந்த மனு அவசர வழக்காக தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு முன் விசாரிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்