குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்வு !

குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2022-07-26 13:09 GMT

அகமதாபாத்,

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதனை அருந்திய பலரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

இதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி 21 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

சுமார் 30 பேர் இன்னும் பல இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. 


Tags:    

மேலும் செய்திகள்