சூரிய கிரகணத்தன்று திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் வெகுவாக குறைந்தது
சூரிய கிரகணத்தன்று திருப்பதியில் 25 ஆயிரத்து 549 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை 3 மணியில் இருந்து இரவு நடக்கும் ஏகாந்த சேவை வரை வழக்கமாக ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். நேற்று முன்தினம் சூரிய கிரகணத்தன்று 25 ஆயிரத்து 549 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இது தேவஸ்தான வரலாற்றில் மிகக்குறைந்த எண்ணிக்கையாகும் எனக் கூறப்படுகிறது. அன்று 9 ஆயிரத்து 764 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சூரிய கிரகணத்தையொட்டி கோவில் கதவு மூடப்பட்டு இருந்ததால் உண்டியல் காணிக்கைகள் எண்ணப்படவில்லை.