புதுமண தம்பதி, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம்

கலப்பு திருமணம் செய்த புதுமண தம்பதி, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புதுமண தம்பதி தஞ்சம் அடைந்தனர். மேலும் அவர்கள் பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-02-03 21:00 GMT

சிக்கமகளூரு:-

திருமணம்

சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா மல்லேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஹேமந்த். லட்சுமிபுரா கிராமத்தை சேர்ந்தவர் அனன்யா (24). கல்லூரியில் படிக்கும்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்தது. மேலும் அவர்கள் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு இருவீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவர்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர். பின்னர் அவர்கள் தனியாக வசித்து வந்தனர்.

பாதுகாப்பு வழங்க கோரிக்கை

இந்த நிலையில் அவர்களுக்கு இருவீட்டாரும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக தெரிகிறது. மேலும் அவர்களை பிரித்து வைக்கவும் முயற்சி மேற்கொண்டதாக தெரிகிறது. இந்த நிலையில், புதுமண தம்பதி நேற்று முன்தினம் சிக்கமகளூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். அப்போது அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த்தை சந்தித்து தங்ளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

அந்த மனுவை வாங்கி கொண்ட உமா பிரசாந்த், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாக உறுதி அளித்தார். இதையடுத்து புதுமண தம்பதிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், இருவீட்டாரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த், தரிகெரே போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்