'தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நிலையானது அல்ல' - சஞ்சய் ராவத்
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நிலையானது அல்ல என்றும் அது எப்போது வேண்டுமானாலும் கவிழும் என்றும் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மும்பை,
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இந்தியாவின் பிரதமராக 3-வது முறை நரேந்திர மோடி கடந்த 9-ந்தேதி பதவியேற்றார். இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நிலையானது அல்ல என்றும் அது எப்போது வேண்டுமானாலும் கவிழும் என்றும் சிவசேனா(உத்தவ் தாக்கரே அணி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"கடந்த 2014 மற்றும் 2019ம் ஆண்டுகளில் இருந்தது போன்ற நிலை தற்போது இல்லை. மத்தியில் தற்போது ஆட்சி அமைத்திருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நிலையானது கிடையாது. இந்த ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழலாம். சந்திரபாபு நாயுடு மக்களவை சபாநாயகர் பதவியை கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு அந்த பதவி கிடைக்கவில்லை என்றால், அவருக்கு 'இந்தியா' கூட்டணியின் ஆதரவு கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம்" என்று தெரிவித்தார்.