உணவு, ஊட்டச்சத்து பாதுகாப்புக்கான தேசிய மாநாடு வரும் 5ந்தேதி தொடக்கம்

டெல்லியில் வரும் 5ந்தேதி தொடங்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புக்கான தேசிய மாநாட்டில் மத்திய மந்திரி பியூஷ் கோயல் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

Update: 2022-07-03 12:34 GMT



புதுடெல்லி,


இந்தியாவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புக்கான ஒரு நாள் தேசிய மாநாட்டை டெல்லியில் வருகிற 5ந்தேதி உணவு மற்றும் பொது வினியோக துறை நடத்துகிறது. இதனை மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது.

இந்த மாநாட்டில் மத்திய மந்திரி பியூஷ் கோயல் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதில், மத்திய இணை மந்திரிகள் சாத்வி நிரஞ்சன் ஜோதி, ஸ்ரீ அஷ்வினி குமார் சவுபே உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த மாநாட்டில் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவு மற்றும் பொது வினியோகத்துக்கான மந்திரிகளும் கலந்து கொள்கின்றனர்.

இந்த மாநாட்டின் முக்கிய சிறப்பம்சங்களாக உணவில் நுண்ணிய ஊட்டச்சத்துகளை சேர்த்து வலுவூட்டுதல், வேளாண் விளை பொருட்களை பல்வகைப்படுத்துதல், பயிர்களை பல்வகைப்படுத்துதல், ஒருங்கிணைந்த அன்னவித்ரான் வலைதளம் 2.0 மற்றும் பொது வினியோக திட்டம் மற்றும் சேமிப்பு துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளல் ஆகியவை பற்றிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று, இந்த மாநாட்டில், சில மாநிலங்களில் பின்பற்றப்படும் சில சிறந்த நடைமுறைகளும் பரவலாக பகிர்ந்து கொள்ளப்படும். இந்த மாநாடு, நாட்டில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு சூழலியல் நடைமுறையை எட்டுவதற்கான கூட்டாட்சி ஒத்துழைப்புக்கான உண்மையான நோக்கத்துடன் சவால்கள் மற்றும் வாய்ப்புகளை பிரதிபலிப்பதற்கான ஒரு தளம் ஆக அமையும்.

Tags:    

மேலும் செய்திகள்