எருமை மீது நகரசபை தலைவரின் பெயரை எழுதி அட்டகாசம்

எருமை மீது நகரசபை தலைவரின் பெயரை எழுதி அட்டகாசம் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-11-07 17:10 GMT

குடகு-

குடகு மாவட்டம் மடிகேரி நகரசபை தலைவராக பணியாற்றி வருபவர் அனிதா பூவையா. பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர் ஆவார். நகரசபை தலைவராக பொறுப்பு வகித்த நாள் முதல் தற்போது வரை சிறப்பாக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவரது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் மர்மநபர்கள், தெருவில் சுற்றித்திரியும் எருமை மாடு மீது அவரது பெயரை எழுதி நடமாடவிட்டுள்ளனர். இதைப்பார்த்த பொதுமக்கள் நகரசபை தலைவர், பா.ஜனதா பிரமுகர்களிடம் கூறினர். இதற்கு அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் பா.ஜனதா கட்சியினர் சார்பில் மடிகேரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்