தாய்மொழி கண் போன்றது; பிற மொழிகள் கண்ணாடி போன்றது - வெங்கையா நாயுடு

தாய்மொழி கண் போன்றது, ஆங்கிலம் போன்ற பிற மொழிகள் கண்ணாடி போன்றது என முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.;

Update: 2022-10-21 18:19 GMT

புதுடெல்லி,

டெல்லியில் இந்திய ஒளிபரப்பு கூட்டமைப்பின் செய்திகளின் எதிர்காலம் என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது, செய்தி ஒளிபரப்பு கூட்டமைப்பு 65 உறுப்பினர்களைக் கொண்ட மிகப்பெரிய செய்தி கூட்டமைப்பு ஆகும். இந்த அமைப்பு நாடு முழுவதும் பிராந்திய ஒளிபரப்பாளர்களிடமிருந்து அதிகபட்ச விளக்கக்காட்சியைக் கொண்டுள்ளது. ஜனநாயகத்தில் மக்களே முதன்மையான முதலாளிகள். ஊடகங்கள் ஒடுக்கப்பட்ட, மற்றும் குரலற்றவர்களின் குரலாக மாற வேண்டும்.

தாய்மொழியை தவிர மற்ற மொழிகளின் வளர்ச்சிக்கும் பாடுபட வேண்டும். தாய்மொழியானது கண் பார்வை போன்றது. ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகள் கண்ணாடி போன்றது. கண் பார்வை இருந்தால் தான் கண்ணாடி வேலை செய்யும்.

இந்தியாவின் மொழிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும், ஏனென்றால் அவை மக்களின் மொழிகள். அதிக மொழி தெரிந்தால் அதிக வாய்ப்பு வரும், மொழி திணிப்போ எதிர்ப்போ கூடாது என்ற நிலைப்பாடு தேவை.

நான் மாநிலங்களவை தலைவராக இருந்த போது உங்களுக்கு விருப்பமான எந்த மொழியிலும் நீங்கள் பேசலாம் என்று உறுப்பினர்களிடம் சொன்னேன். எனது விருப்பம் என் விருப்பம் எப்போதும் தாய்மொழிதான்.

முதலில் தாய் மொழி பிறகு சகோதர மொழி, பிறகு வேறு எந்த மொழியும் பிரச்சனை இல்லை. ஏனென்றால் மக்கள் தங்கள் தாய்மொழியை எளிதில் புரிந்துகொள்கிறார்கள். அதனால்தான் நான் எங்கு சென்றாலும் இதை வலியுறுத்துகிறேன்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்