மாம்பழத்துக்கு ஆசைப்பட்டு போலீஸ் வேலையை பறிகொடுத்த கேரள காவலர்

கேரளாவில் பழக்கடை முன்பு வைக்கப்பட்டிருந்த மாம்பழங்களை திருடிய காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-02-15 11:18 GMT

இடுக்கி,

கேரளாவில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய காவலர்களை பணியில் இருந்து விடுவிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இடுக்கி மாவட்டத்தில் பழக்கடை முன்பு வைக்கப்பட்டிருந்த மாம்பழங்களை திருடிய காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் தேதி, கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் பணி முடிந்து வீடு திரும்பிய காவலர் ஷிஹாப் என்பவர் பழக்கடையின் முன்பு வைக்கப்பட்டிருந்த மாம்பழங்களை திருடினார்.

இந்த வழக்கில், பழக்கடைக்காரர் தனக்கு புகார் இல்லை என கூறியதையடுத்து, ஷிஹாப் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இருப்பினும் திருட்டு சம்பவம் காவல்துறைக்கு அவமரியாதையை ஏற்படுத்தியதோடு துறை ரீதியான நடவடிக்கைக்கும் ஆளானதால், அவரை பணியில் இருந்து விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Full View

Tags:    

மேலும் செய்திகள்