குற்றவாளிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் உத்தரவு பிறப்பித்த நீதிபதிக்கு கொலை மிரட்டல்

பீகாரில் குற்றவாளி ஒருவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் உத்தரவு பிறப்பித்த நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடப்பட்டு உள்ளது.

Update: 2022-12-12 05:35 GMT



பெகுசராய்,


பீகாரின் பெகுசராய் நகரில் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டான ரும்பா குமாரியின் பணியாளர் ஒருவர் போலீஸ் சூப்பிரெண்டு யோகேந்திர குமாரிடம் புகார் ஒன்றை அளித்து உள்ளார்.

அதில், குற்றவாளியான சாலிகிராம் கனோஜியா என்பவருக்கு எதிராக பெண் நீதிபதி குமாரி, ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் உத்தரவு பிறப்பித்ததற்காக அவருக்கு கனோஜியா கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதனால் கனோஜியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புகாரை பெற்று கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எனினும், குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை. விரைவில் குற்றவாளியை கைது செய்வோம். அதன்பின் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்