தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று: மேலும் 456 பேருக்கு கொரோனா.. குஜராத்தில் ஒருவர் பலி
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் 440 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று மேலும் 456 பேருக்கு தொற்று உறுதியானது. இதன் மூலம் தொற்றுக்கு ஆளானோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 89 ஆயிரத்து 968 ஆக அதிகரித்தது.
நேற்று ஒரு நாளில் 343 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டனர். இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 55 ஆயிரத்து 782 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
குஜராத்தில் நேற்று கொரோனா தொற்றால் ஒருவர் இறந்தார். இதன்மூலம் தொற்றுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 780 ஆக உயர்ந்துள்ளது.
தொற்றில் இருந்து மீள சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையில் நேற்று 112 அதிகரித்தது. அந்த வகையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 406 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.