கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதால் கர்நாடக கைவினை பொருட்கள் ஆணைய தலைவரை கைது செய்ய வேண்டும்; ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா வலியுறுத்தல்

கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதால் கர்நாடக கைவினை பொருட்கள் ஆணைய தலைவரை கைது செய்ய வேண்டும் என்று ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா வலியுறுத்தி உள்ளார்.

Update: 2022-07-15 22:16 GMT

பெங்களூரு:

கா்நாடக அரசின் கைவினைப்பொருட்கள் வளர்ச்சி ஆணையத்தின் இயக்குனராக ஐ.பி.எஸ். அதிகாரியான ரூபா இருந்து வருகிறார். இவருக்கும், கைவினைப்பொருட்கள் வளர்ச்சி ஆணையத்தின் தலைவரான பேளூரு ராகவேந்திராவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதாவது அந்த ஆணையத்தில் பேளூரு ராகவேந்திரா முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக ரூபா குற்றச்சாட்டு கூறி வருகிறார். அதுபோல், ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா மீதும் பேளூரு ராகவேந்திரா குற்றச்சாட்டு கூறியுள்ளார். இந்த நிலையில், ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

கைவினைப்பொருட்கள் வளர்ச்சி ஆணையத்தின் தலைவரை கைது செய்யும்படி கோரி கடந்த 2019-ம் ஆண்டில் இருந்தே பெங்களூரு கோர்ட்டு கைது வாரண்டு பிறப்பித்திருந்தது. அவரை கைது செய்யும்படி போலீசாருக்கும், போலீஸ் கமிஷனருக்கும் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. நேற்று வரை ஆணையத்திற்கு வந்து வழக்கமான பணிகளில் பேளூரு ராகவேந்திரா ஈடுபட்டதாலும், அவர் தலைமறைவாக இருப்பதாக கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்கின்றனர். கோர்ட்டு உத்தரவை போலீசார் மீறுவதும் சட்டப்படி குற்றமாகும். எனவே கோர்ட்டு உத்தரவுப்படி பேளூரு ராகவேந்திராவை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர் மீது தொல்லை கொடுத்தாக வழக்கு தொடர்ந்துள்ள மூத்த குடிமகனுக்கு நியாயம் கிடைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்