துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கேட்கும் சிக்கமகளூரு நகரசபை தலைவர்; போலீஸ் சூப்பிரண்டிடம் வலியுறுத்தல்
சிக்கமகளூரு நகரசபை தலைவர் வரசித்தி வேணுகோபால், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்சய் மச்சீந்திராவை சந்தித்து மனு ஒன்று கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:-;
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு நகரசபையில் சாதி ரீதியாக உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் எழுந்து வருகிறது. குறிப்பாக நான் கவுன்சிலர் ஒருவரின் சாதி பற்றி பேசியதாக அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
மேலும் எனக்கு சிலர் மிரட்டல் விடுத்து வருகின்றனர். நான், எந்த நேரம் வேண்டுமானாலும் மக்கள் பணிக்காக வெளியே செல்ல வேண்டியது இருக்கும்.
ஆனால் பாதுகாப்பு குறைவாக உள்ளது. எனவே, துப்பாக்கி ஏந்திய போலீசாரை நியமித்து எனக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை பெற்று கொண்ட போலீஸ் சூப்பிரண்டு அக்சய் மச்சீந்திரா அரசிடம் அனுமதி பெற்று நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே நகரசபை வரலாற்றில் இதுவரை இதுபோன்று எந்தவொரு தலைவரும் தனக்கு பாதுகாப்பு கேட்டது இல்லை என பேசப்பட்டு வருகிறது.