சாக்லேட் வாங்கி தருவதாக கூறி சிறுமி பாலியல் பலாத்காரம்

வெளியே சென்ற பெற்றோர் வீட்டிற்கு திரும்பியபோது மகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.;

Update: 2024-04-30 16:06 GMT

பெங்களூரு,

பெங்களூரு காடுகோடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். அந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறாள். சிறுமியின் பெற்றோர் வேலை விஷயமாக வெளியே சென்றனர். அப்போது சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள். பின்னர் வீட்டு முன்பாக நின்று சிறுமி விளையாடினாள். அந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த 2 வாலிபர்கள், சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுப்பதாக கூறி அழைத்து சென்றனர்.

பின்னர் ஒரு வீட்டில் வைத்து சிறுமியை 2 வாலிபர்களும் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வெளியே சென்ற பெற்றோர் வீட்டிற்கு திரும்பியபோது மகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தபோது தான், அந்த வாலிபர்கள் சிறுமியை வீட்டுக்கு அழைத்து சென்றது பெற்றோருக்கு தெரிந்தது. உடனே வீட்டுக்கு சென்று பார்த்தபோது சிறுமி அழுது கொண்டு இருந்தாள். மேலும் சிறுமியை 2 வாலிபர்களும் பாலியல் பலாத்காரம் செய்திருப்பதும் தெரியவந்தது. உடனே 2 வாலிபர்களும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்கள்.

உடனே அப்பகுதி மக்கள் 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்து தர்ம-அடி கொடுத்தனர். பின்னர் 2 பேரும் காடுகோடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த சச்சின் மற்றும் சேகர் என்பது தெரியவந்தது. அதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்