காட்டுயானைகளின் அட்டகாசத்தை வனத்துறையினர் தடுக்க வலியுறுத்தி மடிகேரியில் விவசாயிகள் கண்டன போராட்டம்

குடகு மாவட்டத்தில் காட்டுயானைகளின் அட்டகாசத்தை வனத்துறையினர் தடுக்க வலியுறுத்தி மடிகேரியில் வருகிற 21-ந் தேதி விவசாயிகள் கண்டன போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

Update: 2022-11-01 18:45 GMT

குடகு: குடகு மாவட்டத்தில் காட்டுயானைகளின் அட்டகாசத்தை வனத்துறையினர் தடுக்க வலியுறுத்தி மடிகேரியில் வருகிற 21-ந் தேதி விவசாயிகள் கண்டன போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

காட்டுயானைகள் அட்டகாசம்

குடகு மாவட்டத்தில் காட்டுயானைகள் தொல்லை அதிகளவில் உள்ளது. காட்டுயானைகள் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி கிராமங்களுக்குள் புகுந்து காபி தோட்டங்கள், நெற்பயிர்கள், விவசாய நிலங்களை நாசப்படுத்தி வருகின்றன. இதுபற்றி விவசாயிகள் வனத்துறையினரிடம் தெரிவித்தும் அவர்கள் இதுவரையில் காட்டுயானைகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் குடகு மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டம் மடிகேரியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் சோமய்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் காட்டுயானைகளின் அட்டகாசத்தை வனத்துறையினர் தடுக்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் இணைந்து வருகிற 21-ந் தேதி மடிகேரியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாபெரும் அளவில் கண்டன போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

முற்றுகை போராட்டம்

மேலும் 21-ந் தேதி அன்று மடிகேரியில் உள்ள ஜெனரல் திம்மய்யா சர்க்கிளில் இருந்து வனத்துறை அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்து முற்றுகை போராட்டம் நடத்த வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்திற்குள் வனத்துறையினர், காட்டுயானைகளின் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள், கன்னட அமைப்பினர் பலரும் கலந்து கொண்டனர் 

Tags:    

மேலும் செய்திகள்