நாட்டில் வலுவான எதிர்க்கட்சி வேண்டும் : பிரதமர் மோடி பேச்சு

நாட்டில் வலுவான எதிர்க்கட்சி வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்

Update: 2022-06-03 12:00 GMT

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவிற்கு பிரதமர் மோடி இன்று பயணம் செய்துள்ளார். அங்கு முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். இந்த மாநாட்டின் போது, சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 1,406 திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இதன்பிறகு உத்தரபிரதேசம் ,தெஹாத்தில் நடைபெற்ற விழாவில் அவர் கலந்துகொண்டார் .அதில் பேசிய பிரதமர் மோடி பேசியதாவது ;

யாருடனும் எனக்கு தனிப்பட்ட பிரச்சனைகள் இல்லை என்பதை நான் அவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன். நாட்டில் வலுவான எதிர்க்கட்சி வேண்டும். ஜனநாயகத்தை வலுப்படுத்த, குடும்பங்களில் சிக்கியுள்ள கட்சிகள் அதிலிருந்து மேலெழ வேண்டும் .என பிரதமர் மோடி கூறியுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்