தமிழகத்திற்கான வரி பகிர்வாக ரூ.4,825 கோடி விடுவித்தது மத்திய அரசு..!
தமிழகத்திற்கான வரி பகிர்வாக ரூ.4,825 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
புதுடெல்லி,
தமிழகத்திற்கான வரி பகிர்வாக ரூ.4,825 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. பல்வேறு மாநிலங்களுக்கு வரி பகிர்வின் 3-வது தவணையாக மத்திய அரசு ரூ.1,18,280 கோடியை விடுவித்துள்ளது.
வழக்கமாக மாதாந்திர தவணையாக ரூ.59,140 கோடி மட்டுமே விடுவிக்கப்படும் நிலையில், முன்கூட்டியே கூடுதல் தவணையையை மத்திய அரசு விடுவித்துள்ளது.
மாநிலங்களின் மூலதன மற்றும் வளர்ச்சி செலவினங்களை வேகப்படுத்தி, மாநிலங்களின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் உறுதியின் அடிப்படையில் இந்த தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.