மதுபோதையில் பெற்ற தாயை கற்பழித்த கொடூரம்; வாலிபர் கைது
உத்தர கன்னடாவில் மதுபோதையில் பெற்ற தாயையே வாலிபர் ஒருவர் கற்பழித்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
கார்வார்: உத்தர கன்னடாவில் மதுபோதையில் பெற்ற தாயையே வாலிபர் ஒருவர் கற்பழித்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
வாலிபர்
உத்தர கன்னடா மாவட்டம் தாண்டேலி டவுன் பகுதியில் வசித்து வந்தவர் ரோச்சி ஜான் புட்தோலா(வயது 24). இவர் கூலித்தொழிலாளி ஆவார். இவர் தனது தாய் மற்றும் தந்தையுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜானின் தந்தை இறந்துவிட்டார். இதனால் அவர் தனது தாயுடன் வசித்து வந்தார். தற்போது அவரது தாய்க்கு 52 வயது ஆகிறது.
இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி ஜான் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த தனது தாயை அழைத்துள்ளார். தூக்கத்தில் இருந்த அவர் எழுந்து வந்த பார்த்தபோது, திடீரென அவருக்கு ஜான் பாலியல் தொல்லை கொடுத்தார்.
கற்பழிப்பு
இதை சற்றும் எதிர்பாராத அந்த பெண் அதிர்ந்து போனார். பின்னர் அவர் தனது மகன் ஜானை கண்டித்தார். ஆனால் மதுபோதையில் இருந்த அவர் தனது தாயை அடித்து, உதைத்து பலவந்தமாக கட்டாயப்படுத்தி கற்பழித்தார். இதில் அந்த பெண் நிலைகுலைந்து போனார். பின்னர் மயக்கத்தில் இருந்த ஜான் மீண்டும் அதிகாலை எழுதார். அப்போது அவர் அழுது கொண்டிருந்த தனது தாயை மீண்டும் மிரட்டி அடித்து, உதைத்து கற்பழித்தார்.
இதனால் அந்த பெண் மிகவும் பாதிக்கப்பட்டார். பின்னர் அவர் இதுபற்றி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தாண்டேலி டவுன் போலீசில் புகார் செய்தார்.
கைது
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜானை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பெற்ற மகனே தாயை கற்பழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.