கரடி தாக்கி 3 விவசாயிகள் காயம்

கரடி தாக்கி 3 விவசாயிகள் காயம் அடைந்தனர்.

Update: 2022-06-07 21:17 GMT

துமகூரு: துமகூரு மாவட்டம் திப்தூர் தாலுகா மனகிகெரே கிராமம், வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை வனப்பகுதியில் இருந்து இரைதேடி கரடி ஒன்று ஊருக்குள் புகுந்தது. மேலும் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கரடி புகுந்து அங்கு விவசாய பணியில் ஈடுபட்டு இருந்த விவசாயியை தாக்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து தோட்டத்தை சேர்ந்த மேலும் 2 விவசாயிகள் அங்கு விரைந்து வந்து கரடியை விரட்ட முயன்றனர். ஆனால் அவர்களையும் கரடி தாக்கியது. பின்னர் 3 விவசாயிகளும் சேர்ந்து கரடிகளை விரட்டியடித்தனர்.


இருப்பினும் கரடி தாக்கியதில் 3 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் திப்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விசாரணையில், கரடி தாக்கியதில் காயமடைந்தவர்கள் திப்தூர் அருகே சவுடஹள்ளியை சேர்ந்த கங்காதரய்யா (வயது 50), மனகிகெரே கிராமத்தை சேர்ந்த சிவண்ணா (40), ஹனுமந்தய்யா (42) ஆகியோர் என்பது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்