எடியூரப்பா இல்லாத பா.ஜனதாவை உருவாக்கும் முயற்சி வெற்றி- காங்கிரஸ் விமர்சனம்
எடியூரப்பா இல்லாத பா.ஜனதாவை உருவாக்கும் முயற்சி வெற்றி என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-வருணா தொகுதியில் எடியூரப்பா மகன் விஜயேந்திரா போட்டியிட முயற்சி செய்தார். அதை பா.ஜனதா மேலிடம் தடுத்தது. மஸ்கி, ஹானகல் ஆகிய தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் நிற்க அவர் திட்டமிட்டார். அதையும் பா.ஜனதா நிராகரித்துவிட்டது. தனது மகனை எம்.எல்.ஏ. ஆக்கி மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று எடியூரப்பா கேட்டார்.
அதையும் பா.ஜனதா மேலிடம் ஏற்கவில்லை. இதையடுத்து வேறு வழியில்லாமல் எடியூரப்பா தனது சிகாரிப்புரா தொகுதியை மகனுக்கு விட்டு கொடுத்துள்ளார். இதன் மூலம் எடியூரப்பா இல்லாத பா.ஜனதாவை உருவாக்கும் அக்கட்சியின் முயற்சி வெற்றி பெற்றுள்ளது.
இவ்வாறு காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.