விமானத்தில் மீண்டும் ஒரு சம்பவம்: குடி போதையில் பணிப்பெண்ணிடம் சில்மிஷம்...2 பேர் கைது...!
டெல்லி விமானத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட 2 பேரை விமானத்துறை போலீசார் கைது செய்தனர்.;
புதுடெல்லி,
டெல்லியில் இருந்து பாட்னாவுக்கு சென்ற இண்டிகோ விமானத்தில் பீகாரைச் சேர்ந்த இரண்டு பயணிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு குடிபோதையில் பயணம் செய்துள்ளனர்.
அவர்கள் விமானத்தில் பயணத்தின் போது விமான பணிப்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் பாலியல் ரீதியாக தாக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
இதனை அடுத்து, பயணிகளை சமாதானப்படுத்த முயன்ற விமான கேப்டனையும் அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. விமானத்தின் கேப்டன் கொடுத்த புகாரின் பேரில், விமானத்தில் இருந்து இறங்கி வெளியேற முற்பட்டவர்களை விமான நிலைய போலீசார் அவர்களை இடை மறித்து கைது செய்துள்ளனர்.
மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட இருவரரும் பீகார் பிரபல அரசியல் கட்சியினர் தொடர்பில் இருப்பவர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.