பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி - பிரதமர் மோடி

பிரதமர் மோடி இன்று 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்

Update: 2024-09-17 15:40 GMT

புதுடெல்லி,

குஜராத் முதல்-மந்திரியாக நான்கு முறையும், நாட்டின் பிரதமராக 3வது முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி இன்று 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அரசியல் கட்சித்தலைவர்கள், மாநில முதல்-மந்திரிகள், மாநில கவர்னர்கள், மத்திய மந்திரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி.யும்,மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் , பிறந்தநாள் வாழ்த்துக்கள் நரேந்திர மோடி ஜி. நீங்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

மக்களிடமிருந்து இவ்வளவு அன்பை பெறுவதில் பணிவு மற்றும் பெருமை. எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களுக்காக தொடர்ந்து உழைக்க இந்த பாசம் எனக்கு மகத்தான பலத்தை அளிக்கிறது. எங்களது மூன்றாவது பதவிக்காலம் 100 நாட்களை நிறைவு செய்யும் தருணமும் இதுவே. கடந்த 100 நாட்கள் மக்கள் சார்பான மற்றும் வளர்ச்சி சார்ந்த முடிவுகளால் குறிக்கப்பட்டிருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். என தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்