"தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி" - பிரதமர் மோடி டுவீட்

தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி என்று பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-27 09:27 GMT

புதுடெல்லி,

தமிழகத்தில் 36 ஆயிரம் கோடி மதிப்பிலான மத்திய அரசின் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதற்காக ஒரு நாள் பயணமாக நேற்று மாலை சென்னை வந்த பிரதமர் மோடியை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், கவர்னர் ஆர்.என். ரவி , எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் துரைமுருகன் ,பொன்முடி, ஆகியோர் வரவேற்றனர்.

பிரதமர் மோடிக்கு பாஜகவினரும் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். தாரை தப்பட்டை, பரத நாட்டியம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலமும் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நேரு உள்விளையாட்டு அரங்கம் செல்லும் வழியில் காரில் நின்றவாறு மக்கள் மற்றும் தொண்டர்களைப் பார்த்து பிரதமர் மோடி கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில், தமிழகம் வருகை குறித்து பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில்,

"தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. நேற்றைய தமிழ்நாடு பயணம் மறக்க முடியாத பயணமாக அமைந்தது" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்