ஆண்டுக்கு 2 முறை ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும்; மந்திரி பி.சி.நாகேஸ் தகவல்
ஆண்டுக்கு இரண்டு முறை ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என்று மந்திரி பி.சி.நாகேஸ் கூறினார்.;
பெங்களூரு:
பள்ளிக்கல்வித்துறை மந்திரியாக பி.சி.நாகேஸ் பொறுப்பு ஏற்று ஓராண்டு ஆகிறது. இதையொட்டி அவர் நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது, பள்ளிகல்வித்துறை மந்திரியாக தான் ஓராண்டு செய்த சாதனைகள் குறித்தும், பள்ளிக்கல்வித்துறையில் அறிமுகப்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து கூறினார்.
மேலும் இனி ஆண்டுக்கு 2 முறை ஆசிரியர் தகுதி தேர்வு(டெட்) நடத்துவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறிய அவர், இந்த ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு வருகிற நவம்பர் மாதம் நடக்க உள்ளதாக கூறினார். பின்னர் அரசு கன்னட பள்ளிகளில் குழந்தைகளுக்கு ஆங்கில புலமையை வளர்க்க ஆங்கில வகுப்புகள் நடத்தப்பட இருப்பதாகவும், அறநெறி வகுப்புகளை தொடங்க உள்ளதாகவும் கூறினார்.