காஷ்மீரி பண்டிட்டை கொன்ற பயங்கரவாதி சுட்டு கொலை; நீதி கிடைத்துள்ளது: பண்டிட் மனைவி பேட்டி

காஷ்மீரி பண்டிட்டை கொன்ற பயங்கரவாதியை சுட்டு கொன்ற பாதுகாப்பு படை நல்ல பணியை செய்துள்ளது என்று பண்டிட்டின் மனைவி பேட்டியில் கூறியுள்ளார்.;

Update: 2022-12-20 09:51 GMT


ஜம்மு,


ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இன்று நடந்த மோதலில் காஷ்மீரி பண்டிட்டான பூரன் கிருஷண் பட் (வயது 48) என்பவரை சுட்டு கொன்ற பயங்கரவாதியை படையினர் சுட்டு வீழ்த்தினர்.

இதுபற்றி காஷ்மீரி பண்டிட்டின் மனைவி பேட்டியில் கூறும்போது, நீதி கிடைத்து உள்ளது. பயங்கரவாதி கொல்லப்பட்டது நடக்க வேண்டிய ஒன்றே. ஏனெனில் அப்பாவி மனிதரை அவர்கள் சுட்டு கொன்றுள்ளனர். பாதுகாப்பு படை நல்ல பணியை செய்துள்ளது என கூறியுள்ளார்.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் சவுத்ரிகண்ட் கிராமத்தில் வீட்டுக்கு முன்பிருந்த புல்வெளி பகுதியில் நின்றிருந்த பூரன் கிருஷண் பட் என்பவரை கடந்த அக்டோபர் 15-ந்தேதி மோட்டார் சைக்கிளில் வந்த 2 பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர்.

இந்த சம்பவத்தில் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் பட் உயிரிழந்து விட்டார். அவருக்கு சுவீட்டி (வயது 41) என்ற மனைவியும், 11 வயதில் ஒரு மகள் மற்றும் 8 வயதில் ஒரு மகன் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்