காஷ்மீர்: ரூ.10 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட பயங்கரவாத குழு தலைவன் சுட்டுக்கொலை

பாசித் தார் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

Update: 2024-05-07 12:41 GMT

காஷ்மீர்,

காஷ்மீரில் டி.ஆர்.எப். என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவன் பாசித் தார். இவரை பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடயே குத்வானி என்ற பகுதியில் பாசித் தார் பதுங்கியிருப்பதாகக் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர், அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தீவிரவாத அமைப்புத் தலைவன் பாசித் தார் சுட்டுக் கொல்லப்பட்டான். மேலும், அவனுடன் இருந்த மற்றொரு பயங்கரவாதியும் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்